வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
" alt="" aria-hidden="true" />

குடியாத்தம், 

 

குடியாத்தம் அருகே கள்ளூர் முல்லைநகர் 4–வது தெருவை சேர்ந்தவர் அன்வர்பாஷா. இவர் குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை வீட்டை பூட்டி கொண்டு அன்வர்பாஷா குடும்பத்துடன் தரணம்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.


 


 

நேற்று காலையில் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம், 3 கைகெடிகாரம், குக்கர்கள், மிக்சி, மின்சார அடுப்பு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தன.

 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதே பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Popular posts
‘வாட்ஸ்-அப்’ மூலம் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
Image
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது
Image
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரசுக்கு எதிராக மதுரையில் சில இடங்களில் மட்டும் ஏற்றப்பட்ட தீபம்
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்
Image
திருச்சி மதர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில்
Image