புதுக்கோட்டையில் பரோட்டா சுட்டு ஓட்டு கேட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு பகுதி மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமிக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள உணவகத்திற்கு சென்ற விஜயபாஸ்கர், பரோட்டா சுட்டு காண்பித்து  அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர் பரோட்டா சுட்டதை உடனிருந்த அதிமுகவினர் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.


அதிமுகவும், திமுகவும் நூதன முறையில்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற வேண்டுமென முனைப்பு காட்டி வருகின்றன. இப்படித்தான் லோக்சபா தேர்தலின்போது நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கலில் போட்டியிட்டபோது விதம் விதமாக பிரச்சாரம் செய்து மக்களைக் கவர்ந்தார். அந்தப் பாணியை தற்போது மற்ற கட்சிகள் கையில் எடுத்துள்ளன போலும்


Popular posts
‘வாட்ஸ்-அப்’ மூலம் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
Image
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது
Image
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரசுக்கு எதிராக மதுரையில் சில இடங்களில் மட்டும் ஏற்றப்பட்ட தீபம்
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்
Image
திருச்சி மதர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில்
Image