3-வது முறையாக ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வாழ்த்து




" alt="" aria-hidden="true" />

3-வது முறையாக ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வாழ்த்து இதுகுறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்

 

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்ட சபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. டெல்லி சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது.  வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 1.47 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்து மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் எனவே தெரிவித்தன. இந்த கருத்துகணிப்புக்களை மெய்பிக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்புக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர்.

 

நாட்டின் தலைநகரான டெல்லி தேர்தலை நாடு முழுவதும் மட்டுமின்றி உலக முழுவதும் வாழும் இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்த பாஜக, காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து ஆம் ஆத்மி கட்சியை 3-வது முறையாக மக்கள் தேர்ந்தெடுத்து நல்ல முன் உதாரணத்தை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தி காட்டியுள்ளனர்.

 

டெல்லி தேர்தலை பொறுத்தவரை மதபிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் பிரசாரம் அமைந்திருந்தது. ஆனால் அதையெல்லாம் மக்கள் ஏற்க மறுத்து மதவாத சக்திகளுக்கு மரண அடியை இந்த தேர்தல் மூலம் மக்கள் அளித்துள்ளனர்.

 

ஆம்ஆத்மியின் இந்த வெற்றியின் மூலம் மாற்றத்தை நோக்கி நாட்டு மக்கள் பயணிக்க தெடாங்கியுள்ளதை காட்டுகிறது. தனது ஆட்சிகாலத்தில் செய்த சாதனையும், ஆட்சி அமைத்தால் செய்ய போகும் திட்டங்களை முன்னிறுத்தி ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் அர்விந்த் கெஜ்வரிவால் பிரசாரம் மேற்கொண்டார், கெஜ்ரிவாலின் இந்த பிரசாத்திற்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

 

ஆம்ஆத்மி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தேர்தல் பிரசாரத்தில் போது அளித்த வாக்குறுதிகளை ஆம்ஆத்மி நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்





 

Popular posts
‘வாட்ஸ்-அப்’ மூலம் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
Image
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது
Image
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரசுக்கு எதிராக மதுரையில் சில இடங்களில் மட்டும் ஏற்றப்பட்ட தீபம்
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்
Image
திருச்சி மதர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில்
Image